தியானம் # 10 - தேவையை பேராசையானது மிஞ்சும் போது

தியானம் # 10


தேவையை பேராசையானது  மிஞ்சும் போது

For the Audio Version, click here - தேவையை பேராசையானது மிஞ்சும் போது

"தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு," 2 இராஜாக்கள் 5:20

நாகமான் எலிசாவுக்கு அளித்த வசீகரமான பரிசுகளைப் பார்த்தும்  கேயாசியின் கண்கள் பேராசையினால் குருடாகியது. அவன் தீர்க்கதரிசி எலிசாவின் வேலைக்காரனானதால் நிச்சயமாக அவன் தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டிருக்கும்.   மேலும் ஏழை விதவைக்கும் அவளது 2 குமாரருக்கும் தீர்க்கதரிசி எலிசாவால் செய்யப்பட்ட அற்புதங்களையும் சற்றுமுன் தான் தன் கண்களால் கண்டிருந்தான். அவள் கரத்தில் இருந்த சிறு எண்ணை ஜாடியைக் கொண்டு தேவன் அவளை கடனே இல்லாதவளாக மாற்றினார் 2 இராஜாக்கள் 4: 1-7.

பொருட்களின் விற்பனையும் அதின் பயன்பாடும் நிறைந்த உலகில் தான் நாம் வாழ்கிறோம். நாம் கவனமாய் இல்லை என்றால் இதில் நாம் சிக்கிக்கொள்ளக்கூடும்.   பணத்திற்காகவும் பொருளுக்காகவும் ஏற்படும் பெரும் விருப்பதை தனிக்க பலர்  கழுத்து வரை கடனில் சிக்கிக் கொள்கிறார்கள்.  கேயாசியைப் போலவே இந்த மக்களை பேராசையானது, பொய்ச் சொல்லவும், ஏமாற்றவும், அபகரிக்கவும் வஞ்சிக்கிறது.

ஜனக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவிடம், ஆஸ்தியைப் பாகம்பிரித்து தன் வீதத்தை தனக்குத் தரும்படி தன் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, அவனுக்கும் அவனை சூழ்ந்திருந்த மற்றவர்களுக்கும் அவரது பதில் என்னவென்றால், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல " லூக்கா 12:15

பவுல் தீமோதேயுவுடன் ஓர் அற்புதமான சமன்பாட்டை கொண்டிருந்தார்: தேவபக்தி + போதுமென்கிற மனம் = மிகுந்த ஆதாயம், மேலும் அதற்கான காரணத்தையும் தருகிறார், "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்"
1 தீமோத்தேயு6:6,7


இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

படைப்பு: எஸ்தர் காலின்ஸ்


மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 1 - என்னைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார்?

தியானம் # 2 - சில சமயங்களில் சோர்ந்துப் போவது சரியா?