தியானம் # 13 - நற்செய்தியைப் பகிர்வோம்


தியானம்  # 13

தியானம்  # 13
 நற்செய்தியைப் பகிர்வோம்

For the Audio Version, click here - நற்செய்தியைப் பகிர்வோம்

"பின்பு  அவர்கள் (குஷ்டரோகிகளான நாலுபேர்) ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்." 2 இராஜாக்கள் 7: 9

(முழு கதையை அறிய 2 இராஜாக்கள் 7 ஆம் அதிகாரத்தைப் படியுங்கள்)

சம்பவத்தின் சுருக்கம்:
  இஸ்ரவேல் தேசம் கடுமையான பஞ்சத்தில் இருக்கும்போது, தேவன் தமது ஜனத்தின் தேவைகளை அற்புதமாக சந்திப்பார் என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். மறு நாள் இராத்திரியில், தேவன் சீரியர்கள் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதால், தங்கள் உடைமைகளை விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள். சீரியர்களின் கூடாரம் காலியாக இருப்பதை, இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த நான்கு குஷ்டரோகிகள் தான் முதலில் பார்த்தார்கள். அவர்கள்  திருப்தியாக குடித்து, புசித்து,  வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போனார்கள். திடீரென தங்கள்  மனசாட்சியில் குத்துண்டவர்களாய், மேல்கூறியுள்ள வார்த்தைகளை உரைத்தார்கள். இஸ்வேலில் உள்ள தமது ஜனத்தின் தேவைகளை சந்திக்கும்படி தேவன் இடைப்பட்ட நற்செய்தியை அறிவிக்காமல் இருப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்தார்கள். 

சமூக ஊடகங்கள் மூலமாக, ஏறக்குறைய அனைத்தையும் விளம்பரப்படுத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அவற்றில் சில உண்மையாகவும் அனேகம் பொய்யாகவும் இருந்தாலும் அனைத்துமே பிரபலமாக பகிர்ந்து கொள்ள படுகிரது. அந்தச் செய்திகளை (நன்மையோ தீமையோ)  பிறருடன் பகிர்ந்துக்கொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம்.

ஆனால் தேவனிடமிருந்து நாம் பெற்ற நற்செய்தி - இயேசுவே இரட்சகர், அவர் இந்த உலகத்தை பாவத்திலிருந்து மீட்கும்படி வந்து; இம்மையிலும் பரலோகத்தில் நித்திய ஜீவனை  பரிபூரண வாழ்வையும் அளிக்க வந்தார், என்ற  விஷேஷித்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்ற எண்ணம் எத்தனை முறை நம்மில் தோன்றியிருக்கிறது? இந்த செய்திதான் இம்மையிலும் மறுமையிலும் மக்களை மறுரூபமாக்கக்கூடியச் செய்தி.

நாம் மற்றவர்களுக்கு இந்த நற்செய்தியை கடைசியாக அறிவித்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அந்த குஷ்டரோகிகள் போல நாமும் நம்பிக்கையற்ற உதவியற்ற நிலையில் தான் இருந்தோம். ஆனால், கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் தான் நம்மை இரட்சித்து காத்தது. அவர்களைப் போலவே நாமும், நம்மைச் சற்றி இருப்பவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்காமல் இருக்கக் கூடாதென்பதை உணரவேண்டும். 

பின்பு, அவர்(இயேசு) அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார் மாற்கு 16:15 


இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.


இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

படைப்பு: எஸ்தர் காலின்ஸ்


மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 8 - நம்பிக்கையாய் மட்டும் இரு/ வெறுமனே நம்பு

தியானம் # 11 - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை