தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்
தியானம் # 14
நம்
வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்
For the Audio Version, click here - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்
For the Audio Version, click here - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்
"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;
மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக்
கூட்டுவேன்..." (2 இராஜாக்கள் 20:5,6)
முழு விவரத்தை அறிய 2 இராஜாக்கள் 20: 1-11 வரை வாசிக்கவும்.
எசேக்கியா இராஜா வியாதிப்பட்டு மரணத்துக்கு
ஏதுவாயிருந்தான், அப்பொழுது தேவனின் வார்த்தை ஏசாயா என்னும் தீர்க்கதரிசி மூலம் அவனுக்கு
வந்து, அவனை நோக்கி: "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர்,
மரித்துப்போவீர்" என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அந்த செய்தியைக்கேட்டு
எசேக்கியா மனமுடைந்துப் போனான்.
இஸ்ரவேலில் தேவனுக்கு உண்மையாய் இருந்த
சில இராஜாக்களில் இவனும் ஒருவன். இதை அவன் நினைவுப்படுத்தி தேவனிடத்தில் மனம்
கசந்து அழுதான். தேவன் மனம் மாரி, முன் கூறப்பட்ட வசனத்தில் உள்ளப்படி ஏசாயா தீர்க்கதரிசியிடம்
எசேக்கியாவின் வாழ்நாட்களில் 15 வருடங்கள் கூட்டினேன் என்ற நற்செய்தியை அனுப்பினார்.
அநேக நேரங்களில் தேவன் நம்மை கிருபையாய்
பல தீமையினின்று பாதுகாத்த, வியாதிகளிலிருந்து சுகமாக்கி, வைத்திருப்பதை நம்மால் நினைவுக்கூர
முடியும். நாம் கேட்க்க வேண்டிய கேள்வி என்னவென்றால்,' ஏன் தேவன் நம்மை உயிரோடு வைத்திருக்கிறார்,
மற்றும் அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரிடமும் அவர் என்ன எதிர்பார்க்கிறார்?'
தேவன் நமக்கு கிருபையாய் கூட்டி கொடுக்கும்
ஒவ்வொரு அண்டும் அவருடைய சித்தத்திற்கும் திட்டத்திற்கும் ஒத்ததாய் இருக்கும் காரியங்களையே
செய்ய முற்படுவோம்.
தேவனை இன்னும் அதிகமாக நேசிப்போம், அவருடைய
வார்தையை தினமும் வாசித்து தியானிப்போம், ஊக்கமாக ஜெபிக்க கற்றுக்கொள்வோம், ஒருவரோடு
ஒருவர் கொண்டுள்ள உறவில்
ஆழமாக வளருவோம், மற்றவர்களை ஊக்கப்படுத்தி
அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் வழியை தேடுவோம், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
நற்செய்தியை பகிர்வோம் மற்றும் தேவன் நாம் இருக்க வேண்டும் என்று எண்ணினபடி மெய்யான
வெளிச்சமாகவும் உப்பாகவும் இருப்போம்.
எசேக்கியாவைப் போல தேவன் நம் ஆயுளை நீடிக்கப்பன்னினால்
நாம் என்ன செய்வோம்? மிகுந்த கவனமாக தேவன் நமது வாழ்க்கைக்கு வைத்துள்ள சித்தத்தை நிறைவேற்றுவோமா
அல்லது கவலையின்றி நம்முடைய வாழ்வை தொடருவோமா?
மோசேயின்
ஜெபமாக கருதப்படும் 90 ஆம் சங்கீதம், 12 ஆம் வசனம் நடைமுறை வாழ்க்கையைப் பற்றின
ஓர் சிறந்த கண்ணோட்டத்தை தருகிறது. இந்த ஜெபம் என்னவென்றால் “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும்
அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
For the Audio Version, click here - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment