தியானம் # 1 - என்னைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார்?

தியானம்  # 1

என்னைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார்?

ஒரே வசனத்தில் தாவீதைப் பற்றிய தேவனின் சாட்சி. “தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
1 இராஜாக்கள் 15: 5 

ஒருவரும் பரிபூரணமானவர்கள் கிடையாது. நாம் யாவரும் சில சமயங்களில் பாவம் செய்து, காரியங்களை  குழப்பியிருக்கிறோம். 

ஆனால் கேள்வி என்னவெனில், 'நாம் அவருக்கு கீழ்படிந்து, சூழ்நிலைகள் கடினமாக இருந்தாலும் ,தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றி, நம்மடைய அனுதின வாழ்வில் அவர் பார்வைக்கு சரியானதைச் செய்கிறோமா? என்பதே'.

என்னைக் குறித்து தேவன் சாட்சி கொடுக்க நேர்ந்தால் அது என்னவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 

இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் Share பண்ணுங்கள். 


எழுதியவர்: எஸ்தர் காலின்ஸ்

மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 2 - சில சமயங்களில் சோர்ந்துப் போவது சரியா?