தியானம் # 12 - தேவன் நம் பட்சத்தில் இருந்தால்
தியானம் # 12
"அதற்கு அவன்:
பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்
என்றான்..."
2 இராஜாக்கள் 6:
16, 17
சீரிய இராஜா எலிசாவை
சிறைப்பிடிக்க தீர்மானித்து, தனது குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும்
அனுப்பி எலிசா இருந்த பட்டணத்தை வளைத்துக் கொண்டான். எலிசாவின் வேலைக்காரன்
மறு நாள் காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான்– முழு பட்டணமும்
சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. சீரிய இராணுவத்தை மட்டும் அவன் கண்ட நிலையில், எலிசா
தேவனின் படையைக் கண்டான். அப்பொழுது அவன் தனது இள வயது வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட
தேவனை வேண்டிக்கொண்டதால், அவன் எலிசாவைச் சுற்றி மலை முழுவதும் நின்ற குதிரைகளையும்
அக்கினி இரதங்களையும் கண்டான். தேவனின் ஆச்சரியமான சேனை எலிசாவிற்கு காவலாக நின்றது.
(அற்புதமான விடுதலையைப்பற்றி
2 இராஜாக்கள் 6: 13 – 23 -யில் வாசித்துப் பாருங்கள்).
எத்தனை முறை நம்மை
அதிகமாக அடக்கி ஆள்கற சூழ்நிலைகளில் நாம் சிக்கி இருப்பதை உணர்ந்திருக்கிறோம். மேற்கொள்ள
முடியாத கஷ்டத்தை நாம் திர்கொள்ளும்
போது, நாம் தனித்திருப்பது
போலவும் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்ற எண்ணமும் நம்மில் மேலோங்கி நிற்கும்.
சற்று நேரம் தேவன் நமது கண்களை திறக்க அனுமதித்தால், எலிசாவின் வேலைக்காரனைப்போல
நாமும் அதிர்ச்சி அடைவோம், ஏனெனில் தேவன் நம் பட்சத்தில் இருக்கும் போது நாம்
எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகவே இருப்போம், மேலும் தேவனால் சமாலிக்கக் கூடாத கடினமான
சூழ்நிலை எதுவும் இல்லை.
1 யோவான் 4:4 அழகாக
கூறுகிறது, “பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில்
உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”
ஞாயிறு பள்ளி முடித்து
வீடு திரும்பின 4 அல்லது 5 வயது நிறைந்த ஒரு சிறுவனை நான் நினைவுக்கூறுகிறேன்.
"நீ இன்று என்னக் கற்றுக்கொண்டாய்?" என்று அவன் தாய் கேட்டபோது, அவன்
ரோமர் 8: 31 யை விலக்கின விதத்தை நான் மிகவும் விரும்பினேன். அவன், “தேவன் என்
பக்கத்தில் இருந்தால், எனக்கு எதிர் பக்கத்தில் யாரும் நிற்க முடியாது என்று கற்றுக்கொண்டேன்.”
என்றான்.
For the Audio Version, click here - தேவன் நம் பட்சத்தில் இருந்தால்
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment