தியானம் # 11 - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை
தியானம் # 11
தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை
For the Audio Version, click here - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை
For the Audio Version, click here - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை
(முழு சம்பவத்தை அறிய 2 இராஜாக்கள் 6: 8- 12 யை படியுங்கள்)
"அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்." 2 இராஜாக்கள் 6:12
இஸ்ரவேல் இராஜாவுக்கு எதிராக தனது அதிகாரிகளுடன் தீட்டப்படும் அனைத்து சூழ்ச்சிகளையும் வெளியிடுகிறவன் யார் என்று அறியாததால், சீரிய இராஜா ஓர் பெரிய குழப்பத்தில் இருந்தான். இதனால் அவன் தனது கூட்டத்தில் தன்னைக் காட்டிக்கொடுப்பவன் இருப்பதாக எண்ணினான். அப்பொழுதுத்தான் சீரிய தேசத்து இராஜாவிற்கு அவன் அதிகாரிகளில் ஒருவன் எலிசாவைப்பற்றி கூறினான். தேவன் சீரிய இராஜாவின் திட்டங்கள் அனைத்தையும் எலிசாவுக்கு வெளிப்படுத்தினார், அதை அவன் இஸ்ரவேளின் இராஜாவுக்கு முன்னெச்சரிக்கயையாக அறிவித்து வந்தான்.
ஆம் நம் அனைவரையும் பற்றிய அனைத்து காரியங்களையும் தேவன் அறிந்திருக்கிறார் என்பது நம்பமுடியாதாக தோன்றுகிறது அல்லவா? சங்கீதம் 139 சொல்லுகிறது. தேவன் நமது நினைவுகள், வார்த்தைகள் மற்றும் நமது வழிகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மை காண்கிறது, நம்மீது அவர் நோக்கமாய் இருக்கிறார், நாம் கடந்துச் செல்லும் சூழ்நிலைகள் அனைத்தையும் பற்றி அவர் சிந்தையுள்ளவராக இருக்கிறார் என்று அறியும் போது பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது. மற்றொருப் பக்கத்தில், தேவனை மகிமைப்படுத்தாத, பிறரை இழிவுப்படுத்தும் எந்த சிந்தையும், வார்த்தையும், செயலும் தேவனின் கணக்கில் உள்ளது என்பதையும் நமக்கு நினைப்பூட்டுகிறது.
லூக்கா 12:2,3 யில் இயேசு தமது சீஷர்களுக்கு அளித்த புத்தி மதிகள் நமக்கும் நல்ல அறிவுரையாக இருக்கிறது.
"வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை
ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்."
For the Audio Version, click here - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment