தியானம் # 2 - சில சமயங்களில் சோர்ந்துப் போவது சரியா?

தியானம்  # 2

சில சமயங்களில் சோர்ந்துப் போவது சரியா?
அவன் (எலியா) வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி -1 இராஜாக்கள் 19:4

கர்மேல் மலையில் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றப்பின்னும்- வேதாகமத்தில் தலைசிறந்த தீர்க்கதரிசி என கருதப்பட்ட ஒரு தேவ மனுஷன், வாழ்க்கையை வெறுக்கும் அளவிற்கு தனிமையாக, ஊக்கம் இழந்து, அழுத்தத்திலும் விரக்தியிலும் இருப்பது ஆச்சரியத்தை தருகிறதா ?  நம்மில் அநேகர் அப்படிப்பட்ட காலத்தை கடந்துச்சென்றிருக்கலாம்.  அல்லது, தற்போது அதைப்போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். 

 தேவனுக்கு கீழ்படிந்து, நம்மால் முடிந்த அனைத்தையும்  அவருக்கு கொடுத்து முடித்திருக்கலாம். 1இராஜாக்கள் 19-யில் தேவ மனுஷனை கர்த்தர் தமது அன்பான கவனிப்பாலும், கனிவான  குரலாலும் எப்படி உற்சாகப்படுத்துகிறார் எனப் படித்துப்பாருங்கள்.  எலியாவின் நிலையில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை. இதில் சிறந்தது என்னவென்றால் தேவன் அதை முழுமையாக அறிந்திருக்கிறார்.  உண்மையாக நாம் சோர்ந்து போகும்போதெல்லாம் நம்மீது கொண்ட  அதிகமான அக்கரறையால், நம்மை உற்சாகப்படுத்தி தூக்கிவிட அவர் வருகிறார். 

நமது தாழ்மையிலும் மிக கடினமான நேரங்களிலும் தேவன் 
நமக்கு மிக அருகில் இருக்கிறார்.  

இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
எழுதியவர்: எஸ்தர் காலின்ஸ்

மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 1 - என்னைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார்?