தியானம் # 3 - நாம் யாவரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்கள்
தியானம் #
3
நாம் யாவரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்கள்
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
நாம் யாவரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்கள்
For the Audio Version of this devotion click below
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
1 இராஜாக்கள் 21:25
சற்று நின்று யோசித்தால், யாரோ ஒருவர் மீது நாம் எல்லா
நேரங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்
- நமது வாழ்க்கை துணை, நமது பிள்ளைகள், நண்பர், உடன் வேலை செய்பவர் என பட்டியல் நீண்டுக்கொண்டே
போகும். நமது சிந்தை, வார்த்தை, செயல்கள் (நடத்தை), எண்ணங்கள், கோட்பாடுகள், முன்னுரிமை
மற்றும் நமது பங்கு அல்லது பதவிகளால் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். மிக
முக்கியமாக, தேவனோடு நாம் கொண்டுள்ள உறவு நிச்சயமாகவே நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நம்மை சூழ்ந்திருப்பவர்கள்
மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், யாருடன் நாம் அதிக நெருக்கமாக இருக்கிறோமோ,
அவர்கள் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்.
ஒருவர் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது
என்பதற்கு யேசபேல் ஒரு எடுத்தக்காட்டு.
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”, என்று இயேசு கூறினார். நாம் எங்கே இருக்கிறோமோ அங்கே மற்றவர்கள்
மீது நன்மையான விதத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு அதற்கொரு சிறந்த
எடுத்துக்காட்டாக இருந்தார்.
எபிரேயர் 10:24 சொல்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், “மேலும்,
அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி (உற்சாகப்படுத்தி, சவாலிட்டு, சாதகமாக்கி)
ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுவோம்.’’
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும்
பகிரவும்.
For the Audio Version of this devotion click below
எழுதியவர்: எஸ்தர் காலின்ஸ்
Email: thelifetransformingword@gmail.com
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment