தியானம் # 4 - நீங்கள் அந்த சத்தமாக இருங்கள்
தியானம் #
4
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன்
என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.” 1இராஜாக்கள் 22:14
இந்த வசனத்தை பற்றி சுருக்கமான பின்னனி - சீரியா இராஜாவுக்கு ஏதிராக போர் புரிய ஆகாப் இராஜாவும் யோசபாத் இராஜாவும்
உடன்படிக்கை செய்துக்கொண்டனர். போர்புரிய இராஜாக்களை ஊக்குவிக்கும்படி, தமக்கு சாதகமாக
பேசக்கூடிய 400 தீர்க்கதரிசிகளை ஆகாப் இராஜா தெரிந்துக்கொண்டான். மிகாயா என்னும்
தேவனுடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்- மற்ற தீர்க்கதரிசிகளைப் போல் அல்ல ஆனால் ஆகாப்
இராஜாவின் அழிவை முன்னுரைத்த உண்மையான ஒரே தீர்க்கதரிசி. யாருக்கு ஆகாப்பும் யோசபாத்தும் செவிகொடுத்திருப்பார்கள் என்று
எண்ணுகிறீர்கள்- ஆம் பெரும்பான்மையானவர்களுக்கு.
உரைத்தபடி மரணமும் அழிவுமே முடிவு.
தேவனுடைய சத்தத்தை கேட்பதும் கீழ்படிவதும் மேலும் மேலும்
கடினமாக மாறக்கூடிய காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தினுடைய சத்தம் மிக உரக்க இருப்பது மட்டும் அல்லாமல், பெரும்பாலும்
தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் எதிராகவே
இருக்கிறது. அந்த ஒரு தனிக் குரலாக, தனிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதைவிட, கூட்டத்தோடு அனுசரித்து ஒன்றுகலந்துப் போவது மிக
எளிதானது. “செத்த மீன் மட்டும் தான் ஓட்டத்தோடு செல்லும்" என்ற ஒரு பழமையான சொல்லும்
உண்டு.
யோவான் 10: 27 யில் இயேசு,
“ என் ஆடுகள் என்
சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது,”
என்றார்.
தேவனுடைய அந்த சத்தமாக நாம் இருக்க
விரும்பினால், என்ன நேர்ந்தாலும் அவருடைய சத்தத்தை கேட்டு அவருக்கு கீழ்படிய
நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும்
பகிரவும்.
For the Audio Version, click here - நீங்கள் அந்த சத்தமாக இருங்கள்
எழுதியவர்: எஸ்தர் காலின்ஸ்
Email: thelifetransformingword@gmail.com
மொழியாக்கம்:
குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment