தியானம் # 5 - நகைச்சுவை ஒருப்பக்கம் இருக்கட்டும் - உணரக்கூடியவர்களாக இருப்போம்

தியானம் # 5



நகைச்சுவை ஒருப்பக்கம் இருக்கட்டும் - உணரக்கூடியவர்களாக  இருப்போம்

For the Audio Version, click on the link below


"அவன் (எலியா) அவ்விடத்தை விட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனை...நிந்தித்தார்கள்" 2 இராஜாக்கள் 2:23

வரம்பை மீறாமல் சரியாய் பயன்படுத்தும் வரை நகைச்சுவை நல்லதுதான். நகைப்பு  தேவன் நமக்கு அருளிய வரம். ஆனால்  மறுப்பக்கத்தில் அது சில சமயங்களில் யாரோ ஒருவரின் இழப்பிற்கு காரணமாக  இருக்கலாம். நமது நகைச்சுவை மக்ககளை நோக்கி இருக்கும் போது (குறிப்பாக அவர்கள் தோற்றத்தை அல்லது இயலாமையை)  அது பெரும்பாலும் ஆழமான, உணர்வுப்பூரணமான காயத்தை மக்களிடம் ஏற்படுத்தும். 

காயப்படுத்தப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். நம்மை சுற்றி பார்த்தால், அநேகர் தங்களது சொந்த பிரச்சனைகளாலும் தனிப்பட்ட சவால்களாலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானது நமது அன்பும் அங்கிகரிப்பும் தான்.   நாம் ஒவ்வோருவரும் (எப்படி தோன்றுகிறோம் அல்லது நமது சவால்கள் என்ன என்பதை தவிர ) நாம் தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டவர்கள். நகைச்சுவையானது அன்பு கலந்ததாக இருக்கவேண்டும் மேலும் அது பிறரைப் பற்றினதாக இருக்கக்கூடாது என்று நமது பிள்ளைகளுக்கும் வாலிபர்களுக்கும் கற்பிக்க வேண்டும். 

எலிசாவை கிண்டல் செய்த அந்த 42 இளைங்கர்களும் ஏன் அப்படிப்பட்ட விளைவை சந்தித்தார்கள் என்று ஒருவருக்கும் நிச்சயமாய் தெரியாது, ஆனால் அந்த தீர்க்கதரிசி ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தது தெளிவாக தெரிகிறது, மேலும் தேவனும் அதில் பிரியப்படவில்லை. 
நாம் நகைச்சுவை செய்து சிரிக்கலாம், ஆனால் நமது நகைப்பு சந்தோஷத்தை தரவேண்டும் - யாரையும் புண்படுத்தக்கூடாது. 

"ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்."   மத்தேயு 7: 12 
  
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

For the Audio Version, click on the link below

படைப்பு: எஸ்தர் காலின்ஸ்

மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 8 - நம்பிக்கையாய் மட்டும் இரு/ வெறுமனே நம்பு

தியானம் # 11 - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை