தியானம் # 6 - தேவனின் ஆச்சரியமான வழிகள்

தியானம்  # 6

தேவனின் ஆச்சரியமான வழிகள்

For the Audio Version, click on the link below


அவன் (எலிசா) தீர்கதரிசி கூறியது: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்...
மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். 2 இராஜாக்கள் 3: 16 –18 
 (முழு சம்பவத்தை அறிய 2 இராஜாக்கள் 3 யை படிக்கவும்.)

இந்த வசனத்திற்கான சிறு பின்னனி இதோ; இஸ்ரவேல், யூதா மற்றும் ஏதோம் நாட்டு மன்னர்கள் மூவரும் மோவாபின் இராஜாவை எதிர்த்து போர் புரிய போகின்றனர். இந்த மூன்று படையினரும் தங்களது மிருக ஜீவன்களுடன் 7 நாள் பிரயாணமாக வனாந்திரத்தை சுற்றி வருகையில், அவர்களுக்கு தண்ணீர் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது. மனசோர்வடைந்து அவர்கள் எலிசாவிடம் திரும்பினார்கள். அப்பொழுது தேவன் இடைப்பட்டு் விவரிக்க முடியாத இந்த தீர்வைத் தருகிறார்-  மறுநாளே தண்ணீர் அடித்துக்கொண்டு வந்து பூமியை நிறப்பினதுமன்றி; தேவனுடைய ஜனத்திற்கு வெற்றியை அளிக்கக்கூடிய கருவியாகவும்  இருந்தது.  

பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் சந்திக்கும் போது, விவரிக்க முடியாத  வழிகளில் செயல்படும் தேவனின் பலத்த கரத்திற்குள் நம்பி காரியங்களை அப்படியே ஒப்புகொடுக்காமல், நாம் நமது  எண்ணிக்கைக்கு உட்பட்ட சிந்தனைகளோடு வேறு தீர்வுகளை தேடும்படி அதிகமாக  பிரயாசப்படுகிறோம்.

தேவனின் செயல்பாடுகளாலும், அவரது மீட்பின் செய்திகளாலும் வேதம் நரம்பியுள்ளது.  அவைகளில் சிலவற்றை பெயரிடலாம்: அவரால் கடலை பிளக்க முடியும், வானத்திலிருந்து மன்னாவை பொழியச்செய்ய முடியும், சூரியன் உதிப்பதை தடுக்க முடியும், அக்கினி சூளையிலிருந்து காப்பாற்ற முடியும், பசியாய் இருக்கும் சிங்கங்களின் வாயை அடைக்க முடியும், கழுதையை பேச வைக்க முடியும், சீரும் புயலை அடக்க முடியும், மரித்தோரை உயிரோடு எழுப்பி எப்படிப்பட்ட வியாதியையும் குணமாக்க முடியும். அதே தேவன் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 
  
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஏசாயா 55:8 யில் உள்ளபடி, அடுத்த முறை இப்படிப்பட்ட சாத்தியமற்ற சூழ்நிலையை சந்திக்கும் போது, அதை முழுவதுமாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து அவர் மேல் நம்பிக்கையை வைப்போம். 

 இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

For the Audio Version, click on the link below

எழுதியவர்: எஸ்தர் காலின்ஸ்

மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்

Comments

Popular posts from this blog

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

தியானம் # 8 - நம்பிக்கையாய் மட்டும் இரு/ வெறுமனே நம்பு

தியானம் # 11 - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை