தியானம் # 7 - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
தியானம் #
7
இன்று நான்
யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
For the Audio Version, click here - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
For the Audio Version, click here - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
அவள் (ஓர் சிறிய அடிமைப் பெண்) தன் நாச்சியாரைப் பார்த்து:
என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்;
அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். 2 இராஜாக்கள் 5:3
குஷ்டரோகத்திலிருந்து சுகமான சீரிய நாட்டு படை தலைவனாகிய
நாகமானின் கதை நாம் நன்கு அறிந்த ஒன்று. எனினும் நாகமான் தன் சுகத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு
கருவியாக செயல்பட்ட அந்த சிறுமிக்கு நேராக
கவனத்தை திருப்புகிறேன். சீரியரால் சிறைபிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு
பணிவிடை செய்து வந்த அவள் இஸ்ரவேல் ஊரைச் சேர்ந்தவள். அந்த இளம் பெண்ணிற்கு நிச்சயமாக
இது ஓர் நல்ல சூழலாக இருந்திருக்க முடியாது; ஆனால் தனது எஜமான் மீது அவளுக்கு இருந்த அக்கரை நிமித்தம் அவனை எலிசாவிற்கு
அறிமுகப்படுத்த முன்வந்தது பாராட்டத்தக்கது. ஆனால் அவள் செய்து வைத்த அந்த அறிமுகமானது,
மிகவும் ஆசீர்வாதமாக மாறியது, அதினால் நாகமான்
தன் குஷ்டரோகத்திலிருந்து அற்புத சுகத்தைப் பெற்று தேவனை ஆராதிக்கிறவனாக மாறினான்.
2 இராஜாக்கள்
5:17
மற்றவர்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்படி நம் ஒவ்வொருவரையும்
தேவன் தேர்ந்தெடுத்து அழைத்திருக்கிறார். பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கக்கூடிய சில வழிகள் இதோ. நம்முடைய
வளங்கள், நம் நேரம், ஆற்றல் போன்றவற்றை பிறருடன்
பகிர்ந்துக்கொள்ளலாம்; உற்சாகமளிக்கும் வார்த்தையை பேசலாம், சுகவீனமாக, தனிமையாக
அல்லது இயலாமல் இருக்கும் யாரையாவது சந்திக்கலாம், பிறருடைய வருத்தத்தில் பங்குகொள்ளலாம்,
துக்கத்தில் இருப்பவர்களுடன் துக்கிக்கலாம் அல்லது அவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கலாம்.
பெரும்பாலான நேரங்களில் நமது சொந்த வாழ்க்கை, குடும்பம்,
நமது கவலைகள் மற்றும் வருத்தங்களில் அகப்பட்டுக் கொள்வதால், நாம் யாருக்கு ஆசீர்வாதமாக
இருக்கமுடியும் என்று சிந்திக்க கூட முடியாமல் போகிறது. ஒவ்வொரு நாளும் நமது கண்களை
விரிவாக திறந்து, யாருக்காவது உதவ முடியுமா என்று தேவனிடம் கேட்போம். ஒரு நாளில் நாம் எத்தனை பேருக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்கிறோம்
என்று எண்ணிப்பார்த்தால் அது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை தரும். நமது வாழ்வில் தேவன்
செய்த சொல்லொன்னா நன்மைகளை எண்ணிப் பார்ப்போம். பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கவே தேவன்
நம்மை ஆசீர்வதித்து இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்.
நீதிமொழிகள் 11:25 யில் உள்ள தேவனின் வாக்குதத்தம் - “உதாரகுணமுள்ள
ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”
For the Audio Version, click here - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
For the Audio Version, click here - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும்
பகிரவும்.
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
Email: thelifetransformingword@gmail.com
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment