தியானம் # 8 - நம்பிக்கையாய் மட்டும் இரு/ வெறுமனே நம்பு
தியானம் #
8
"அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி:
தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால்
அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே
சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்!"
2 இராஜாக்கள் 5:13
எளிமையானதை நம்புவதைவிட கடினமானதை செய்வது எளிதாக தோன்றுவது
ஏன் என எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? நான் அதை உங்களுக்கு விளக்குகிறேன்- இயேசு
இந்த பூமிக்கு இரட்சிப்பை இலவசமாக தந்தார்- அவர் அதற்கான விலையை தமது விலையுயர்ந்த
பாவமற்ற ஜீவனைக்கொண்டு செலுத்தியிருந்தாலும், நமக்கு அதை இலவசமாகவே தந்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றின நற்செய்தி என்னவென்றால், சிலுவையில் அவர் செய்து முடித்த
(அவரது மரணம், அடக்கம் மற்றும் நமது சார்பில் அவரது உயிர்த்தெழுதல்)காரியங்களை விசுவாசித்து மனம்திரும்புகிற யாவரும் தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டு,
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இயேசு அளிக்கும் பரிபூரண வாழ்வில்
பங்கடைவார்கள்- அதாவது நித்திய காலம் வரை செல்லும் வாழ்வு. எனினும் இதை அடைவதற்கான வழி எளிமையானதாய் இருப்பதால்
அநேக மக்கள் இந்த ஈவை பெற விரும்புவதில்லை என்பது வேதனையை அளிக்கிறது.
நாகமான் தன்னுடைய வேலைக்காரரின் ஞானமான ஆலோசனைக்கு
செவிக் கொடுத்ததால் தான் தன் வியாதி நீங்க கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட்டான். ஒருவேலை
யோர்தானில் கழுவ வேண்டும் என்ற எலிசாவின் எளிமையான ஆலோசனையை அவன் நம்பி கீழ்படியாமல்
இருந்திருந்தால், தொழு நோயிலிருந்து குணப்படாதவனாக
அவன் வரலாற்றில் கருதப்பட்டிருப்பான்.
வாழ்வை மறுரூப்படுத்தும் இந்தச்செய்தியை வெறுமனெ விசுவாசிக்க
விரும்பாததாலேயே அநேக மக்கள் இன்னும் பாவத்தின் அடிமைத்தனத்தில் உள்ளனர். எல்லா சந்தர்ப்பங்களையும்
பயன் படுத்தி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு இந்த அற்புதமானச் செய்தியை பகிர்ந்துக்கொள்ள
முயற்சிப்போம். ஆதலால் வாருங்கள்....
"கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது
நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" அப்போஸ்தலர் 16:31
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
Email: thelifetransformingword@gmail.com
மொழியாக்கம்: குளோரி ஸ்டீபன்
Comments
Post a Comment