தியானம் # 9 - இது முற்றிலும் இலவசமானது!
தியானம் # 9
இது
முற்றிலும் இலவசமானது!
For the Audio Version of this Devotion, click here - இது முற்றிலும் இலவசமானது!
இந்த சம்பவத்தை முழுமையாக அறிய 2 இராஜாக்கள் 5:14-27 படிக்கவும்
அதற்கு (எலிசா):நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான். 2 இராஜாக்கள் 5:16
"தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன்,"
... நான் (நாகமான்) பிறகே
ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, நாகமானைப்
பின் தொடர்ந்தான்; " 2 இராஜாக்கள் 5:20
தேவ மனுஷனாகிய எலிசாவிற்கும் அவன் ஊழியக்காரனாகிய கேயாசி என்பவனுக்கும் இடையே முழுமையான முரன்பாடு இருந்தது. தேவன் எலிசாவைக்கொண்டு அற்புதம் செய்தார், எனினும் அவன் நாகமானிடமிருந்து கைமாறு எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் அவன் ஊழியக்காரனாகிய கேயாசி நேர் விரோதமாக செய்தான். அதன்
விளைவு பயங்கரமாய் இருந்தது- கேயாசி தேவ மனுஷனாகிய எலிசாவின் தயவை
விட்டுவிட்டு, நாகமானின் குஷ்டரோகத்தைத் தேடிக் கொண்டான். (2 இராஜாக்கள்
5:27).
நாம் நம் வாழ்வில் பெற்றிருக்கும் விலை மதிக்கமுடியாத காரியங்களை சற்று நினைத்துப்பாற்போம்- இரட்சிப்பு, கிருபை, அன்பு, சந்தோஷம், சமாதானம்,
மன்னிப்பு,
நம்பிக்கை, சுகம் மற்றும் நித்திய ஜீவன்- இவை யாவையும் நமது வல்லமையுள்ள
தேவன்
நமக்கு இலவசமாக அளித்திருக்க்கிறார். எவ்விதத்திலும்
எவரும் இவற்றை விலை கொடுத்து நமக்கு வாங்கித்தர முடியாது.
தேவன் இலவசமாக தமது கிருபை வரங்களை நமக்கு தாராளமாக பொழிந்திருப்பதால், நாமும் அவர் நாமத்தால் பிறருக்கு செய்யும் ஊழியங்களுக்கும், சேவைகளுக்கும் எவ்விதத்திலும் விலை நிற்னயம் செய்யாதிருப்போமாக.
இயேசு தமது 12 சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்புகையில்,"பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச்
சொஸ்தமாக்குங்கள்,
குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத்
துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்,"என்றார்.
மத்தேயு 10:7,8.
இந்த தியானம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
For the Audio Version of this Devotion, click here - இது முற்றிலும் இலவசமானது!
படைப்பு: எஸ்தர் காலின்ஸ்
Comments
Post a Comment