Posts

Showing posts from November, 2019

தியானம் # 14 - நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்

Image
தியானம்  # 14 நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம் For the Audio Version, click here -  நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம் "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்..." (2 இராஜாக்கள் 20:5,6 ) முழு விவரத்தை அறிய 2 இராஜாக்கள் 20: 1-11 வரை வாசிக்கவும்.  எசேக்கியா இராஜா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான், அப்பொழுது தேவனின் வார்த்தை ஏசாயா என்னும் தீர்க்கதரிசி மூலம் அவனுக்கு வந்து, அவனை நோக்கி: "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அந்த செய்தியைக்கேட்டு எசேக்கியா மனமுடைந்துப் போனான். இஸ்ரவேலில் தேவனுக்கு உண்மையாய் இருந்த சில இராஜாக்களில் இவனும் ஒருவன்.  இதை அவன் நினைவுப்படுத்தி தேவனிடத்தில் மனம் கசந்து அழுதான். தேவன் மனம் மாரி, முன் கூறப்பட்ட வசனத்தில் உள்ளப்படி ஏசாயா ...

தியானம் # 13 - நற்செய்தியைப் பகிர்வோம்

Image
தியானம்  # 13 தியானம்  # 13   நற்செய்தியைப் பகிர்வோம் For the Audio Version, click here -  நற்செய்தியைப் பகிர்வோம் "பின்பு  அவர்கள் (குஷ்டரோகிகளான நாலுபேர்) ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்." 2 இராஜாக்கள் 7: 9 (முழு கதையை அறிய 2 இராஜாக்கள் 7 ஆம் அதிகாரத்தைப் படியுங்கள்) சம்பவத்தின் சுருக்கம்:   இஸ்ரவேல் தேசம் கடுமையான பஞ்சத்தில் இருக்கும்போது, தேவன் தமது ஜனத்தின் தேவைகளை அற்புதமாக சந்திப்பார் என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். மறு நாள் இராத்திரியில், தேவன் சீரியர்கள் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதால், தங்கள் உடைமைகளை விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள். சீரியர்களின் கூடாரம் காலியாக இருப்பதை, இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த...

தியானம் # 12 - தேவன் நம் பட்சத்தில் இருந்தால்

Image
தியானம்  # 12 தேவன் நம் பட்சத்தில் இருந்தால் For the Audio Version, click here -  தேவன் நம் பட்சத்தில் இருந்தால் "அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்..." 2 இராஜாக்கள் 6: 16, 17 சீரிய இராஜா எலிசாவை சிறைப்பிடிக்க தீர்மானித்து, தனது குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பி எலிசா இருந்த பட்டணத்தை வளைத்துக் கொண்டான்.  எலிசாவின் வேலைக்காரன் மறு நாள் காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான்– முழு பட்டணமும் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. சீரிய இராணுவத்தை மட்டும் அவன் கண்ட நிலையில், எலிசா தேவனின் படையைக் கண்டான். அப்பொழுது அவன் தனது இள வயது வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட தேவனை வேண்டிக்கொண்டதால், அவன் எலிசாவைச் சுற்றி மலை முழுவதும் நின்ற குதிரைகளையும் அக்கினி இரதங்களையும் கண்டான்.  தேவனின் ஆச்சரியமான சேனை எலிசாவிற்கு காவலாக நின்றது.  (அற்புதமான விடுதலையைப...

தியானம் # 11 - தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை

Image
தியானம் # 11 தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை For the Audio Version, click here -  தேவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லை (முழு சம்பவத்தை அறிய  2 இராஜாக்கள் 6: 8- 12  யை  படியுங்கள்) "அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்."  2 இராஜாக்கள் 6:12 இஸ்ரவேல் இராஜாவுக்கு எதிராக தனது அதிகாரிகளுடன் தீட்டப்படும் அனைத்து  சூழ்ச்சிகளையும் வெளியிடுகிறவன் யார் என்று  அறியாததால், சீரிய இராஜா ஓர் பெரிய குழப்பத்தில் இருந்தான். இதனால் அவன் தனது கூட்டத்தில் தன்னைக் காட்டிக்கொடுப்பவன் இருப்பதாக எண்ணினான்.  அப்பொழுதுத்தான் சீரிய தேசத்து இராஜாவிற்கு அவன் அதிகாரிகளில் ஒருவன் எலிசாவைப்பற்றி கூறினான். தேவன் சீரிய இராஜாவின் திட்டங்கள் அனைத்தையும்  எலிசாவுக்கு வெளிப்படுத்தினார், அதை அவன் இஸ்ரவேளின் இராஜாவுக்கு  முன்னெச்சரிக்கயையாக  அறிவித்து வந்தான்.  ஆம் நம் அனைவரை...

தியானம் # 10 - தேவையை பேராசையானது மிஞ்சும் போது

Image
தியானம் # 10 தேவையை பேராசையானது   மிஞ்சும் போது For the Audio Version, click here -  தேவையை பேராசையானது மிஞ்சும் போது "தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,"  2 இராஜாக்கள் 5:20 நாகமான் எலிசாவுக்கு அளித்த வசீகரமான பரிசுகளைப் பார்த்தும்   கேயாசியின் கண்கள் பேராசையினால் குருடாகியது. அவன் தீர்க்கதரிசி எலிசாவின் வேலைக்காரனானதால் நிச்சயமாக அவன் தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டிருக்கும்.   மேலும் ஏழை விதவைக்கும் அவளது 2 குமாரருக்கும் தீர்க்கதரிசி எலிசாவால் செய்யப்பட்ட அற்புதங்களையும் சற்றுமுன் தான் தன் கண்களால் கண்டிருந்தான். அவள் கரத்தில் இருந்த சிறு எண்ணை ஜாடியைக் கொண்டு தேவன் அவளை கடனே இல்லாதவளாக மாற்றினார்  2 இராஜாக்கள் 4: 1-7. பொருட்களின் விற்பனையும் அதின் பயன்பாடும் நிறைந்த உலகில் தான் நாம் வாழ்கிறோம். நாம் கவனமாய் இல்லை என்றால் இத...

தியானம் # 9 - இது முற்றிலும் இலவசமானது!

Image
தியானம்  # 9 இது முற்றிலும் இலவசமானது! For the Audio Version of this Devotion, click here -  இது முற்றிலும் இலவசமானது! இந்த சம்பவத்தை முழுமையாக அறிய 2 இராஜாக்கள் 5:14-27 படிக்கவும் அதற்கு (எலிசா):நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக  அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும்  என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.  2 இராஜாக்கள் 5:16 "தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன்," ...  நான் (நாகமான்) பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று  கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, நாகமானைப் பின் தொடர்ந்தான்; "   2 இராஜாக்கள் 5:20 தேவ மனுஷனாகிய  எலிசாவிற்கும் அவன் ஊழியக்காரனாகிய கேயாசி  என்பவனுக்கும் இடையே முழுமையான முரன்பாடு இருந்தது. தேவன் எலிசாவைக்கொண்டு  அற்புதம் செய்தார், எனினும் அவன் நாகமானிடமிருந்து கைமாறு எதிர்ப்பார்க்கவில்லை,  ஆனால் அவன் ஊழியக்காரனாகிய கேயாசி நேர் விரோதமாக செய்தான். அதன் விள...

தியானம் # 8 - நம்பிக்கையாய் மட்டும் இரு/ வெறுமனே நம்பு

Image
தியானம்   # 8 வெறுமனே நம்பு For the Audio Version, click here -  வெறுமனே நம்பு "அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்!"   2 இராஜாக்கள் 5:13     எளிமையானதை நம்புவதைவிட கடினமானதை செய்வது எளிதாக தோன்றுவது ஏன் என எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? நான் அதை உங்களுக்கு விளக்குகிறேன்- இயேசு இந்த பூமிக்கு இரட்சிப்பை இலவசமாக தந்தார்- அவர் அதற்கான விலையை தமது விலையுயர்ந்த பாவமற்ற ஜீவனைக்கொண்டு செலுத்தியிருந்தாலும், நமக்கு அதை இலவசமாகவே தந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றின நற்செய்தி   என்னவென்றால், சிலுவையில் அவர் செய்து முடித்த (அவரது மரணம், அடக்கம் மற்றும் நமது சார்பில் அவரது உயிர்த்தெழுதல்)காரியங்களை   விசுவாசித்து மனம்திரும்புகிற   யாவரும் தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும...

தியானம் # 7 - இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்?

Image
தியானம்  # 7 இன்று நான்  யாரை ஆசீர்வதிக்க போகிறேன்? For the Audio Version, click here -  இன்று நான் யாரை ஆசீர்வதிக்க போகிறேன்? அவள் (ஓர் சிறிய அடிமைப் பெண்) தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். 2 இராஜாக்கள் 5:3 குஷ்டரோகத்திலிருந்து சுகமான சீரிய நாட்டு படை தலைவனாகிய நாகமானின் கதை நாம் நன்கு அறிந்த ஒன்று. எனினும் நாகமான் தன் சுகத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு கருவியாக செயல்பட்ட அந்த சிறுமிக்கு நேராக   கவனத்தை திருப்புகிறேன். சீரியரால் சிறைபிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு பணிவிடை செய்து வந்த அவள் இஸ்ரவேல் ஊரைச் சேர்ந்தவள். அந்த இளம் பெண்ணிற்கு நிச்சயமாக இது ஓர் நல்ல சூழலாக இருந்திருக்க முடியாது; ஆனால் தனது எஜமான் மீது   அவளுக்கு இருந்த அக்கரை நிமித்தம் அவனை எலிசாவிற்கு அறிமுகப்படுத்த முன்வந்தது பாராட்டத்தக்கது. ஆனால் அவள் செய்து வைத்த அந்த அறிமுகமானது, மிகவும் ஆசீர்வாதமாக   மாறியது, அதினால் நாகமான் தன் குஷ்டரோகத்தி...

தியானம் # 6 - தேவனின் ஆச்சரியமான வழிகள்

Image
தியானம்  # 6 தேவனின் ஆச்சரியமான வழிகள் For the Audio Version, click on the link below தேவனின் ஆச்சரியமான வழிகள் அவன் (எலிசா) தீர்கதரிசி கூறியது: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்... மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். 2 இராஜாக்கள் 3: 16 –18     (முழு சம்பவத்தை அறிய 2 இராஜாக்கள் 3 யை படிக்கவும்.) இந்த வசனத்திற்கான சிறு பின்னனி இதோ; இஸ்ரவேல், யூதா மற்றும் ஏதோம் நாட்டு மன்னர்கள் மூவரும் மோவாபின் இராஜாவை எதிர்த்து போர் புரிய போகின்றனர். இந்த மூன்று படையினரும் தங்களது மிருக ஜீவன்களுடன் 7 நாள் பிரயாணமாக வனாந்திரத்தை சுற்றி வருகையில், அவர்களுக்கு தண்ணீர் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது. மனசோர்வடைந்து அவர்கள் எலிசாவிடம் திரும்பினா...

தியானம் # 5 - நகைச்சுவை ஒருப்பக்கம் இருக்கட்டும் - உணரக்கூடியவர்களாக இருப்போம்

Image
தியானம் # 5 நகைச்சுவை ஒருப்பக்கம் இருக்கட்டும் - உணரக்கூடியவர்களாக  இருப்போம் For the Audio Version, click on the link below நகைச்சுவை ஒருப்பக்கம் இருக்கட்டும் - உணரக்கூடியவர்களாக இருப்போம் "அவன் (எலியா) அவ்விடத்தை விட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனை...நிந்தித்தார்கள்"  2 இராஜாக்கள் 2:23 வரம்பை மீறாமல் சரியாய் பயன்படுத்தும் வரை நகைச்சுவை நல்லதுதான். நகைப்பு  தேவன் நமக்கு அருளிய வரம். ஆனால்  மறுப்பக்கத்தில் அது சில சமயங்களில் யாரோ ஒருவரின் இழப்பிற்கு காரணமாக  இருக்கலாம். நமது நகைச்சுவை மக்ககளை நோக்கி இருக்கும் போது (குறிப்பாக அவர்கள் தோற்றத்தை அல்லது இயலாமையை)   அது பெரும்பாலும் ஆழமான, உணர்வுப்பூரணமான காயத்தை மக்களிடம் ஏற்படுத்தும்.  காயப்படுத்தப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். நம்மை சுற்றி பார்த்தால், அநேகர் தங்களது சொந்த பிரச்சனைகளாலும் தனிப்பட்ட சவால்களாலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானது நமது அன்பும் அங்கிகரிப்பும் தான்.   நாம...